#Breaking : தசரா திருவிழாவில் இவர்களும் கலந்து கொள்ளலலாம் : உயர்நீதிமன்ற மதுரை கிளை
குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நிபந்தனைகளை விதித்து, தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே வெளியே ஆபாச நடனமாட அனுமதி இல்லை. ஆபாச நடனங்கள் இடம் பெற்றால் சினிமா, டிவி நடிகர்களுக்கு நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்களுக்கும் அபராதம் விதிக்கலாம். தசரா திருவிழா ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.