சென்னை:உணவகங்களில் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மளிகைக் கடைகள்,உணவகங்களில் மக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் இடம் பெறுவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,உணவுக்கலப்படம் தொடர்பாக ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது,உணவில் கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனது மளிகைக் கடையில் தரமற்ற மல்லி விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்கள் என்றும்,தரமற்றது,பாதுகாப்பற்றது என்ற அதிகாரிகளின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மனோகர் என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…