நாளை முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக,ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு. ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க மத்தியக் குழு 10 மாநிலங்களுக்கு செல்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.குறிப்பாக,தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது:
“அபாயம் மற்றும் அபாயமில்லாத அனைத்து வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் வீடுகளில் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.எட்டாவது நாள் கொரோனா இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்தால் வெளியில் வர வேண்டும்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும்.ஆனால்,நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கூட்டமாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.வெளிமாநிலங்களுக்கு சென்றும் புத்தாண்டு கொண்டாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும்,தமிழகத்தில் ஒமிக்ரான் பாதித்த 34 பேரில் 12 பேர் குணமடைந்துள்ளனர்.எனினும்,வெளிநாடுகளில் இருந்து வந்த 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.அவர்களின் மாதிரிகள் அடுத்தக்கட்ட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.5 நாட்களில் பரிசோதனை முடிவு தெரிய வரும்.
மேலும்,நாளை 16 வது கொரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது.இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.எனவே,இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…