எந்த திட்டமாக இருந்தாலும், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தல்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசு துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட திட்டங்களின் துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது.
பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். நம் மீது மக்கள் அதிக அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர். அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திட்டங்களை நிறைவேற்றும்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்த வேண்டும்.
அரசின் பல்வேறு திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்படுவதை ஆய்வு கூட்டம் மூலம் காண முடிகிறது. அரசு அறிவிக்கும் திட்டங்களையும், பயன்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சாலை அமைத்தல், குடிநீர் திட்டங்கள் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களில் அதிகளவில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். எந்த திட்டமாக இருந்தாலும், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…