#BREAKING: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை- அமைச்சர் மா.சுப்ரமணியன்..!

Default Image

நண்பகல் 12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்புசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களும் தயாராக இருக்கிறார்கள்.

கிராமபுறங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மலைவாழ் கிராப்புறகளில் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர். ஆனால், தடுப்பூசி தான் இல்லை என்கின்ற நிலை உள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ஒரு கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள், இதுவரை நாம்  செலுத்தியிருப்பது என்பது ஒரு கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249 தடுப்பூசிகள். தற்போது கையில் இருப்பது 2 லட்சத்து 7 ஆயிரத்து 345 தடுப்பூசிகள் உள்ளது.

கையில் உள்ள இரண்டு லட்சம் தடுப்பூசியில் பாதி தற்போது முடிந்து இருக்கும். இதனால் நண்பகல்12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்