BREAKING: ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது.! தமிழக அரசு.!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள். இந்த உத்தரவு மாநில நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.