மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மற்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சமன்பள்ளியில், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சரோஜாவின் இல்லத்திற்கே சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினார்.
மேலும்,பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரின் இல்லத்திற்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கினார். அதேபோல், மூக்கனூரை சேர்ந்த கால்கள் இழந்த இருவருக்கு செயற்கை கால்களை வழங்கினார். அதனை தொடர்ந்து, சூளகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 108 ஆம்புலன்ஸையும் வழங்கியுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மற்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், மக்களை தேடி மருத்துவம் திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
இத்திட்டம் மூலமாக, முதற்கட்டமாக 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த ஒருகோடி பேருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் மூலம் 40- க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் டயாலிசிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 25,000 பேர் களப்பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…