#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்!
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 4 மாத கால அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச்க்குள் நிறைவடைந்துவிடும். எனவே, தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கட்டாயம் வழங்க வேண்டும் என்று வழக்கு விசாரணை வருவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கு இரண்டரை மாதம் தேவைப்படும் என்றும் கூறியது. இந்த நிலையில், தற்போது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாத கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கோரிக்கையை ஏற்று 4 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த மனுதாரர் தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கலாம் என கூறிய நிலையில், உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் மோசமானதாக உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறிய மனுதாரர், தற்போது அவகாசம் கேட்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.