பொதுக்குழு முடிவு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அதிமுக.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, ஈபிஎஸ் அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, தன்னை அதிமுகவில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை எனவும்,இபிஎஸ் ,கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.
அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யபடுவதாக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வானது, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…