சுங்க கட்டணத்தை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள 20 சுங்க சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்க்கு கண்டனம் தெரிவித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,’ தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் 01.09.2022 முதல் 15 சதவீத கட்டண உயர்வை அமலாக்க ஒன்றிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போதே. இந்த கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும், மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற ஒன்றிய அரசு, கட்டண உயர்வை அனைத்து சுங்கச் சாவடிகளுக்கும் விரிவாக்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்துக்குரியதாகும்.
வரலாறு காணாத பண வீக்கத்தை நாடு எதிர்கொள்கிறது. மொத்த விலை பணவீக்கம் காரணமாக சிறு குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில்லரை பணவீக்கம் எளிய மக்களை பதம்பார்க்கிறது. ஏற்கனவே. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையை நோக்கி வேகமாக சரிந்துவருகிறது. இந்த நிலைமைகளை சீராக்க, அரசு செலவினத்தை அதிகப்படுத்த வேண்டும். மக்களின் வருமானத்தை உயர்த்த வேண்டும். அதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால். பாதிக்கப்பட்ட மக்களுக்கே அபராதம் போடும் விதமாகத்தான் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன. உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.. ரயில் டிக்கெட் வாங்கினாலும், ரத்துச் செய்தாலும் கூட ஜி.எஸ்.டி. என்று கட்டணக் கொள்ளை அன்றாடம் அதிகரிக்கிறது. ஏற்கனவே. பெட்ரோல், டீசல், சமையல் வரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக
பாதித்துள்ளது. தற்போது சுங்க கட்டண உயர்வும் வெகுமக்கள் தலையிலேயே சுமத்தப்படும். குறிப்பாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 185 வரை உயர்த்தப்படுகிறது. லாரிக்கான கட்டணம் ரூ.300 வரை உயர்த்தப்படுகிறது. அனைத்து சுங்கச் சாவடிகளிலுமே 15 சதவீத கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து நேரடியாக பாதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். பொதுப் போக்குவரத்தும் சீரழியும்.
மேலும். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு இருக்கும் என்ற கொள்கை மிக மிக அபத்தமான ஒன்றாகும். எனவே. ஒன்றிய அரசாங்கம் தற்போதைய கட்டண உயர்வை திரும்பப் பெற்றுக் கொள்வதுடன். ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
வாகன உரிமையாளர்கள் இதற்கு எதிராக கண்டன குரல் எழுப்பவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேட்டுக் கொள்கிறது.’ என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…