#BREAKING : பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்த குடியரசு தலைவர்..!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்துள்ளார். குடியரசுத் தலைவர் வருகை முன்னிட்டு மசினக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களில் உள்ள 1000த்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து, தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, இன்று இரவு குடியரசு தலைவர் சென்னை செல்ல உள்ளார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.