#Breaking : மண்ணுக்குள் மறைந்தார் மரங்களின் மன்னவன்…!
சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நகைசுவை நடிகர் விவேக் (59), நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே அஞ்சலி செலுத்தி வந்தனர். தமிழக அரசு, சமூக கலை பணியை கௌரவிக்கும் பொருட்டு, காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்திருருந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. பின் காவல்துறையினரின் 2 நிமிட மௌன அஞ்சலிக்கு பின், அவரது பூத உடல் தகனம் செய்யப்பட்டது.