தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார
சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்த ஈரடுக்குபாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை பாலம் கட்டப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இறுதி கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார் என கூறப்பட்டது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரடுக்கு பாலத்தை திறந்து வைத்து கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…