#BREAKING: 2 மணிநேரத்தில் கரையை கடக்கும் மையப்பகுதி..!
தற்போது, நிவர் புயல் கடலூரில் இருந்து வடகிழக்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கே 110 கிலோமீட்டர் தொலைவிற்கு நிவர் புயல் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2 மணிநேரத்தில் நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலின் நகரும் வேகம் 16 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது. நாகப்பட்டினத்தில் 62 மில்லி மீட்டரும் , காரைக்காலில் 84 மில்லி மீட்டரும், கடலூரில் 227 மில்லி மீட்டரும், புதுச்சேரியில் 187 மில்லி மீட்டரும், சென்னையில் 89 மில்லி மீட்டர் மழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மையப்பகுதி கரையை கடக்கும்போது 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.