#BREAKING: பிரதமர் மோடியுடன் தம்பிதுரை எம்பி சந்திப்பு.!
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் அதிமுக எம்பி தம்பிதுரை.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தேன் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி கூறியதாக குறிப்பிட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை, தம்பிதுரை சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் புதிய தொழில் வழித்தடம் அமைக்க ரூ.1.01 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும் என்றும் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்பாடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.