முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு.
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தற்போது நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது. தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, ரூ.500 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்படடிருந்தது. இந்த நிலையில், கோவையில் உள்ள எஸ்பி வேலுமணி வீட்டில் சுமார் 9 மணிநேரம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. எஸ்பி வேலுமணி, அவரது மகள் விகாஸிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், விகாஸ் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார் குறித்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்று புதுக்கோட்டை இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நிறைவு பெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 8 மணிநேரமாக நடைபெற்றது. தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டை தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது.
மேலும், தேனி மருத்துவ கல்லூரி டீன் பாலாஜிநாதன் வீட்டிலும் சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து இரண்டு லாக்கர்களுக்கு சீல் வைத்தது லஞ்ச ஒழிப்புத்துறை. இதனிடையே, கோவையில் எஸ்பி வேலுமணியின் நபரான பொறியாளர் சந்திரசேகர் வீட்டில் இன்று காலை முதல் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நிறைவு பெற்றிருந்தது. இந்த சோதனையில் லேப்டாப் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…