BREAKING : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 2 பேர் பலி..2 பேர் காயம்.!
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி மாவட்டம் அருகே விளாம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 30-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து கொண்டு வந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 2 பேர் சிக்கி பரிதாபகமாக சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்கள். 2 பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்டது தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், ஜனவரி மதம் முதல் தற்போதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 10 -க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.