#BREAKING: காணாமல் போன மயில் சிலையை கண்டறிய குழு – உயர்நீதிமன்றம் உத்தரவு
மயில் சிலை காணாமல் போனது குறித்து கண்டறிய குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மயமானது குறித்து விசாரிக்க உண்மையை கண்டறிய குழு ஒன்றை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ளது. சிலையை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கண்டு பிடிக்க முடியாவிடில் புதிய சிலை அமைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் புலன் விசாரணை, உண்மை கண்டறியும் குழு விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விலை நடைபெற்றது. அப்போது, மாயினுள் சிலை ஒன்று காணாமல் போயிருந்தது. இதற்கு பதிலாக மாற்று சிலை இ=ஒன்று வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 2018-ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சிலை மயமானது தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மயில் சிலை காணாமல் போனது குறித்து கண்டறிய குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.