#BREAKING: மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை – பள்ளிக்கல்வித்துறை
மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மே 1ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான மறு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற வகுப்பு மாணவர்கள் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் வரும் கல்வியாண்டு தயாரிப்புக்காக மே மாதம் இறுதியில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டி இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.