#BREAKING: சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படாது.! தமிழக அரசு .!
சென்னையில் டாஸ்மாக் கடைகளை நாளை மறுநாள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மது கிடைக்காத விரக்தியில் பல மாநிலங்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர். மது கிடைக்காததால் மது பிரியர்கள் 4 மடங்கு விலை கொடுத்து மது குடித்தும் வந்தனர்.
இதைத்தொடர்ந்து ,கொரோனா பாதிப்பால் 40 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடை நேற்று டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தமிழக அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நாளை மறுநாள் திறக்க உத்தரவு பிறப்பித்தது. அதில், தடைசெய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகளை நாளை மறுநாள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.