#BREAKING: தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைப்பு!

TNGovt

ஆன்லைன் (இணையவழி) சூதாட்ட தடைச் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அமைத்து அரசிதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீனை தலைவராக கொண்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சாரங்கன், பேராசிரியர் செல்லப்பன் உள்பட 4 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உளவியலாளர் ரவீந்திரன், தனியார் நிறுவன அதிகாரி விஜய் கருணாகரன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ஆணையம் அமைக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வெறும் யூகங்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவரப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் நிறுவனங்கள் வாதம் வைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பில் கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை. பந்தயம் வைத்து விளையாடும் திறமைக்கான விளையாட்டு சூதாட்டமே என்ற அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல எனவும் கூறியுள்ளனர்.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து, அதை மீறினால் தடை செய்யலாம் என மனுதாரர் தெரிவித்ததை அடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்