#BREAKING: ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ஏப்ரல் 6ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி தொடங்குகிறது.
கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்று 30ம் தேதி அலுவல் குழு முடிவு செய்யும் என்றும் துறைவாரியாக மானிய கோரிக்கை மீது எந்தெந்த தேதிகளில் விவாதம் நடத்துவது என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்து அறிவிக்கும் எனவும் தெரிவித்தார். மானிய கோரிக்கை மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக நேரலை செய்ய திட்டம் என தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான சட்டப்பேரவை கூட்டத்தில் நடந்து வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 6 முதல் மீண்டும் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025