ஜெயலலிதா மரணம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி விசாரணை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என பேரவை விதி உள்ளதால் அக்டோபரில் கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சட்ட மசோதா கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்றும் தகவல் கூறப்படுகிறது. ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைத்து உரிய நடவடிக்கை எடுப்போம் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…