மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக காலை 10 மணிக்கு கூடுகின்றது சட்டமன்ற கூட்டத்தொடர்.
கடந்த 18ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 2022 – 2023-ம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதன்பின் மறுநாள் வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 24ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அமைச்சர்களின் பதில் உரைக்கு பின் தமிழக சட்டமன்றம் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்கு இன்று முதல் மீண்டும் சட்டமன்றம் கூடுகிறது. அதன்படி, காலை 10 மணிக்கு கூடும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. துறை ரீதியான விவாதங்களுக்கு பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிடவுள்ளார்.
இதனிடையே, சொத்து வரி உயர்வு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அதிமுக, பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் நடைபெற்று வருகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…