கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்ற நிலையில், 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டபேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது. தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீடிப்பது குறித்து மசோதா நிறைவேறியது. மேலும் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…