#BREAKING: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்துத்துறை ஆணையராக சண்முக சுந்திரத்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னாவும், புவியில் மற்றும் கனிமவளத்துறை இயக்குநராக நிர்மல் ராஜ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் நியமனம் செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர், மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
IAS Transfers & Postings#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/egH1stzYE7
— TN DIPR (@TNDIPRNEWS) June 6, 2023