#BREAKING: தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Default Image

தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.

அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த தொகைக்கு கூடுதலாக வசூலித்தால் தமிழ்நாடு அரசுக்கு புகார் தெரிவிக்கலாம்.  கடந்த கல்வியாண்டில் பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் கோருவதாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், எந்தவொரு தனியார் மருத்துவ கல்லூரி நிறுவனங்களும் 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ்/பிடிஎஸ் கவுன்சிலிங்கின் ஏதேனும் சுற்றுகளில் விண்ணப்பதாரரை அனுமதிக்க மறுத்தால் மற்றும் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் கோரினால், அந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

எனவே, அனைத்து சுயநிதி (self financing Institutions) நிறுவனங்களும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றன. மேலும், இதுதொடர்பாக மாணவர்களிடம் இருந்து ஏதேனும் குறிப்பிட்ட புகார்கள் கிடைத்தால், அத்தகைய சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்