நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.ஆனால் மே 3- ஆம் தேதிக்கு பிறகு 3 -ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.சில தளர்வுகள் மட்டும் இந்த சமயத்தில் அளிக்கப்பட்டது.
தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில், அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு . பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இதனிடையே நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சலூன் கடைகள், ஸ்பா மற்றும் அழகுநிலையங்கள் இயங்க தடை தொடரும். விவரங்கள் இதோ…
1.டீ கடைகள் (பார்சல் மட்டும் )
2.பேக்கரிகள் (பார்சல் மட்டும் )
3.உணவகங்கள் (பார்சல் மட்டும் )
4.பூ,பழம்,காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள்
5.கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6.சிமெண்ட்,ஹார்டுவேர்,சானிடரிவேர் விற்கும் கடைகள்
7.மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8.மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
9.கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10.வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11.மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12.கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13.சிறிய நகைக்கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )
14.சிறிய ஜவுளி கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாத கடைகள் )
15.மிக்ஸி,கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16.டிவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
17.பெட்டி கடைகள்
18.பர்னிச்சர் கடைகள்
19.சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20.உலர் சலவையகங்கள்
21.கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22.லாரி புக்கிங் சர்வீஸ்
23.ஜெராக்ஸ் கடைகள்
24. இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள்
25.இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள்
26.நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27.விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28.டைல்ஸ் கடைகள்
29.பெயிண்ட் கடைகள்
30.எலக்ட்ரிக்கல் கடைகள்
31.ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடைகள்
32.நர்சரி கார்டன்கள்
33.மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34.மரம் அறுக்கும் கடைகள்
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…