தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடந்து, தியோட்டர் , விளையாட்டு மைதானம், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடப்பட்டன. மத்திய அரசு நாடு முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. இதைத்தொடந்து, மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய மண்டலங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை, தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதில், தியோட்டர், கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளை தொடங்குவது பற்றி இரண்டு நாள்களுக்கு முன் தியோட்டர் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்து பேசினார்.
அப்போது, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அரங்கினுள் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், தற்போது தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்பின் போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…