எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.கச்சத்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாகை மாவட்டத்தைத் சேர்த்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே,சில வாரங்களுக்கு முன்னதாக 40 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.இதனைத் தொடர்ந்து.அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தார்கள்.
அதே சமயம்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், மத்திய அரசுக்கு கடிதம் மூலம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…