#BREAKING: அக்.14-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!
அக்.14ம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், 14-ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதனிடையே கடந்த மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை மற்றும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் 14-ஆம் அமைச்சரவை கூடுகிறது.