#Breaking:முதல்வர் தலைமையில்…ஜூன் 27 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டமானது வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் புதிய திட்டங்கள்,ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக,இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 5-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில்,தற்போது ஜூன் 27 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த அமைச்சரவைக் கூட்டங்களில் எடுக்கக்கூடிய முடிவுகள் கொள்கை ரீதியாக வரக்கூடிய காலங்களில் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்