#BREAKING: தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு!
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் வரைவு நிதிநிலை அறிக்கை, தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின்விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுகிறது என கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவையை கூட்டுவது குறித்தும் அமைச்சரவையில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தொடர்பாக விரைவில் தமிழக அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.