#BREAKING: மார்ச் 18-ல் தாக்கலாகிறது தமிழக பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 18-ஆம் தேதி 2022-23-ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுபோன்று வேளாண் பட்ஜெட் மார்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க கடந்த 5-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதற்கான வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே தயாராகியுள்ள நிலையில், முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நிதிநிலை அறிக்கை தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து மார்ச் 18-ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.