தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி, பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.மேலும்,நிதிநிலை குறித்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் தரப்படும் என்று தகவல் முன்னதாக வெளியாகியது.
இந்நிலையில்,தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது வருகின்ற சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார் என்றும்,அவை,பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…