#BREAKING: தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா!
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார் திலீப் கண்ணன்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலீப் கண்ணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனத்த இதயத்துடன் பாஜவில் இருந்து வெளியேறுகிறேன். சொந்த கட்சியில் இத்தனை ஆண்டு உழைத்தவனை உளவு பார்ப்பது தான் மாநில தலைவர் அண்ணாமலையின் வேலை என குற்றசாட்டியுள்ளார். நான் சொன்னது உண்மையா, பொய்யா என்பது கட்சியின் 90 சதவீத நிர்வாகிகளுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளியில் உள்ள சமூக ஊடக நண்பர்களுக்கு அண்ணாமலை புனித்தாராகத்தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னை போல எத்தனை பேரை வெளியே அனுப்பப்போகிறது என்பதை பார்ப்போம். தவறு எங்கே நடக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துவிட்டு என்னை திட்டுங்கள் என கூறியுள்ளார்.
பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டால் அவருக்கு கட்சியில் இருந்து எந்த சட்ட உதவியும் செய்வது இல்லை. சட்ட உதவி செய்பவர்களை, ஏன் உதவி செய்கிறீர்கள் என்று மிரட்டல் தான் வருகிறது எனவும் குற்றசாட்டியுள்ளார். பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிய திலீப் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கனத்த இதயத்துடன் பாஜவில் இருந்து வெளியேறுகிறேன்..
???????????? pic.twitter.com/MJg1gNG2IA
— Dilip Kannan (@DilipKannan) March 6, 2023