தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை.
தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும், அனுமதி இல்லாததால் அனைவரும் புத்தாண்டை அவரது குடும்பத்தினருடன் வீடுகளில் கொண்டாடுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழகத்தில் கொரோனா நோய்த் நொற்றுப் பரவலை ட்டுப்படுத்தவும். தற்போது பரலி வரும் உருமாறிய ஒமமக்ரான் வைரளி பரவனை தடுக்கவும், தமிழக கை சிவ தளர்வுகளுடன் கூடிய பாரடங்கை அமல்படுத்தியுள்ளது.
மேலும் பண்டிகை காலங்களில் கரோன தொற்றுப்பாவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் ஒன்றுகூடுவதை முற்றிலும் தவிர்க்கும்படி தமிழக அரசு அறியுறுத்தியுள்ளது. வரும் 31.12.2021 அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. எனவே அனைவரும் வீடுகளிலேயேரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இலாஹ வகையில் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வழிபாட்டு தளங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கோவிட் நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கட்டம் ஈடுவதையும் இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமறும் அறிவுறுத்தப்படுகிறது.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட கூடாது. 31.12.21 அன்று இரவு, காவல்துறையினரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
நீண்டதூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்தை தவிர்த்து, இரயிலிலும், பேருந்திலும் பயணிக்க அறிவுறுத்தப்படுகிறது. அதி வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
அவசரத் தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேனீர் அருந்தி பின்னர் பயணத்தை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி இரவு 11 மணி வரை செயல்படும். ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், அவர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ரோந்து வாகன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.
கண்ணியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பர். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 ,112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் எஸ் ஓ எஸ் செயலி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விபத்தில்லா புத்தாண்டாக கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறோம். அனைவருக்கும் தமிழ்நாடு காவல்துறையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…