நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10-ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி, சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி என்பவர் போட்டியிட்டனர். இருவரும் தலா 284 வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், குலுக்கல் முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி வெற்றி பெற்றதாக அறிவித்த, சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதன்மூலம் தனது வெற்றி பறிபோனதாகவும், திமுக வேட்பாளரின் வெற்றியை ரத்து செய்துவிட்டு, தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பழனிசெல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் கட்சி சார்பில் செயல்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்காவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 10-ஆவது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவை மாற்றி அறிவிக்கக்கூறி அழுத்தம் தந்தது யார் உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, சுயேட்சை வேட்பாளர் பழனிசெல்வி தாக்கல் செய்த வழக்கை 10 நாட்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…