#BREAKING: போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் சந்தேக மரணம்!
சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
சென்னையில் கஞ்சா வைத்திருப்பதாக காவல்நிலையதுக்கு விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்டவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை காவல்துறை பிடித்தது. குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ், பட்டினப்பாக்கம் விக்னேஷ் ஆகிய இருவரிடம் இருந்த கஞ்சா பொட்டலம், பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடந்திருந்தது காவல்துறை.
விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல்நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதன்பின்னர் தலைமை செயலக காலனி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றபோது திடீரென விக்னேஷிற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அளித்து செல்லப்பட்டார். விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனை அழைத்து சென்றதாக தகவல் கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்து சென்றபோது சந்தேகம் மரணமடைந்த விக்னேஷின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்தேக மரணம் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.