#BREAKING: உபரி ஆசிரியர் இடமாற்றம் – அரசாணைக்கு தடை!
தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த மரியா அக்சிலியம் பள்ளி, டாக்டர் கேகே நிர்மலா மகளிர் பள்ளி தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு குழுமம் நடத்தும் பள்ளியின் உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும். நீதிமன்றத்தில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, ஆட்சேபம் தெரிவிக்க அவகாசமும் வழங்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.