கோவிலின் ஆகம விதி முறைகள் படித்திருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகக்கற்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குறிப்பிட்ட கோவில்களின் ஆகம விதிகள் தெரிந்திருந்தால் போதும் என அறநிலையத்துறை விளக்கம் கொடுத்து இருந்தது. இதன் அடிப்படையில், அந்தந்த கோவில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகளை தெரிந்து அதில் தேர்ச்சி பெற்று இருந்தாலே போதுமானது.
ஆகமத்தை பின்பற்றாத கோவில்களில் ஆகமத்தை படிக்காதவர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம். அந்த கோயில் ஆகம விதிகளுக்குட்பட்டதா இல்லையா என்பதை பொறுத்து முடிவுசெய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவராவ் அமர்வு விசாரித்த நிலையில், குருக்கள் தரப்பில் பரம்பரையாக வழிவருபவர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்றும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும், ஆகம விதிகளை பின்பற்றும் மற்றும் பின்பற்றாத கோயில்கள் எவை என்பதை குழு நியமிக்கப்பட்டு கண்டறிந்து வருகிறது.
எனவே, அதுவரை தடை பிறப்பிக்க கூடாது எ வாதம் வைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசும் அறநிலையத்துறையும் இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கோரி, நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையில் குருக்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
அதன்படி, கோவிலின் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதும் ஆகம விதி முறைகள் யார்வேண்டுமென்றாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…
சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…