#BREAKING: மீண்டும் சிக்கல்..செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு ரத்து!

Default Image

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புகார் அளித்த சிலர் சமரசமாக சென்றுவிட்டோம் என்று கூறியதால் வழக்கை முடித்து வைத்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இதற்கு எதிராக தர்மராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் பல கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில், அதிரடியான தீர்ப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கு தொடர்பான அனைவருக்கும் புதிய சிக்கல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை தொடர்ந்து நாடற்றகவும் உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi