#Breaking: ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 51 அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 51 காவல்துறை அதிகாரிகளை பதவிஉயர்வு அளித்து, பணியிடை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது.
அதில், சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், கரூர் மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.