#BREAKING: திடீர் அறிவிப்பு.. இஸ்லாமிய அமைப்புகள் கொடுத்த ஷாக்! மாட்டிறைச்சி பிரியாணி இலவசம்!

Published by
பாலா கலியமூர்த்தி

மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு.

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை அனுமதிக்காவிட்டால், இலவசமாக வழங்குவோம் என தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் அறிவித்துள்ளது. பிரியாணி திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக மையம் கட்டடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரியாணி திருவிழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதற்காக 22 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இங்கு  வரக்கூடிய மக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரியாணி திருவிழாவில் சிக்கன் ரூ.50, மட்டன் ரூ.100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி கோரி தலித் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் இன்று காலை முதல் ஆம்பூர் முழுவதும் உள்ள கடைகளில், அவர்களுக்கு ஆதரவு திரட்டி நாளை பிரியாணி திருவிழா நடைபெறும் வர்த்தக மைய கட்டத்திற்கு வெளியில் இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்குவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புவிசார் குறியீடு மற்றும் மனித ஒருமைப்பாட்டிற்கான பிரியாணி திருவிழா என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மாட்டிறைச்சி பிரியாணியை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இல்லை, இதற்கான எதிர்ப்புகளும் நிறைய உள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் மற்றவர்கள் மற்ற இறைச்சியை சாப்பிடுவதற்காக அனுமதி கேட்பார்கள். அதனால் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாட்டிறைச்சி பிரியாணியை இலவசமாக வழங்குவோம் என இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

24 minutes ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

1 hour ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

1 hour ago

அண்ணாமலைக்கு வாய்ப்பு இல்லை? புதிய பாஜக மாநிலத் தலைவர் தேர்தல் அறிவிப்பு இதோ…

சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

1 hour ago

இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…

2 hours ago

அதிமுக நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

4 hours ago