#BREAKING : நாளை முதல் சென்னையில் மீண்டும் புறநகர் ரயில் சேவை தொடக்கம்…!
நாளை முதல் சென்னையில் மீண்டும் புறநகர் ரயில் சேவை தொடக்கம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீப நாட்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, நாளை முதல் மீண்டும் புறநகர் ரயில் சேவைகள் தொடங்குகிறது. அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் புறநகர் ரயிலில் பயணிக்கலாம். முக்கிய நேரத்தை தவிர்த்து, பிற நேரங்களில் மட்டும் ஆண்கள் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.