#BREAKING : நீட் தேர்வு குறித்த ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு…!
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுவரை 4 முறை கூடி நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இதுவரை நீட் தேர்வுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் 86,342 பேர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி ஆனதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அறிக்கையின் படி நீட் தேர்வு குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.