மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சிறுவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தனது ஒரே மகனை பறிகொடுத்த இருப்பதாகவும், பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று சிறுவனின் தாய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின், தற்போது சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், பள்ளி வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் ஒரு காரணம் என அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…