பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதன்படி, 24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக பள்ளி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என்றும், 64 வயது முதியவரை பள்ளி பேருந்து ஓட்டுநராக நியமித்தது ஏன்? வாகனத்திலிருந்து அனைத்து மாணவர்களும் இறங்கி விட்டனரா என பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்? விபத்து குறித்து தாளாளர் பிற்பகல் வரை பள்ளிக்கு வராதது குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…