#BREAKING: தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.. கடைக்கு சீல் வைக்க போலீஸ் பரிந்துரை!
தந்தூரி சிக்கன் சாப்பிட்டு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் உணவகத்துக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12ம் வகுப்பு மாணவர் திருமுருகன் (வயது 17) என்பவர் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார் என தகவல் கூறப்பட்டியிருந்தது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக 5 ஸ்டார் எலைட் அசைவ உணவகத்தை மூடி சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. புகார் மீதான விசாரணை முடியும்வரை உணவகத்திற்கு சீல் வைக்க நகராட்சி ஆணையருக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. மே 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மே 29ல் மாணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.