சென்னை:மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety,மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் என மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.
இதனையடுத்து,மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணையை தொடர்ந்து, கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர்மீது போக்சோ,பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் இவர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து,இவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
மேலும்,உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது என்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் கடிதத்தில் இருப்பதால்,அடுத்தக்கட்டமாக மாணவியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…